search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி மாணவர்"

    தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற ஊத்துக்கோட்டை அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
    ஊத்துக்கோட்டை:

    பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் புனேயில் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மெய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாந்தகுமார் கலந்து கொண்டு மும்முனை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார்.

    அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சிவராமன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். #tamilnews
    அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்.
    அன்னவாசல்:

    கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட கிராம நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேரிக்கப்பட்ட 100 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சீனி, சோப்பு, எண்ணெய், சேமியா, பிஸ்கட், பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

    அதனை மகிழ்வோடு பெற்று கொண்ட கிராம மக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தினமும் பிஸ்கட் வழங்கும் படியும், சமையல் பொருட்களை வைத்து பள்ளி நாட்களில் சமைத்து வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.

    அதனை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:-

    கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட் களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வந்திருந்த பொருட்களில் சோப்பு, பிஸ்கட், ஷாம்பு, சீயக்காய், பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ள மளிகை பொருட்களை வைத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கு முடிவெடுத்துள்ளோம் என்றார். பொதுமக்களும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க எங்களை அழையுங்கள். நாங்கள் வந்து குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையா மற்றும் கிராம நிர்வாகிகள் முத்தன், முருகேசன், பால்கண்ணு, பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
    அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை காங்கிரஸ் அரசு. மக்கள் நல திட்டங்களை வெட்டி சுருக்குவது, தனியார் மயத்தை ஊக்குவிப்பது, மின் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி போன்ற சேவைக்கட்டணங்களை பெருமடங்கு உயர்த்தி மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றுவதுஎன்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை இஸ்கான் என்ற மத அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்கிவரும் அட்சய பாத்திரா அறக்கட்டளை என்ற தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முடிவை மேற்கொண்டுள்ளது.

    மதச்சார்ப்பற்ற அரசியல் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் அரசின் தற்கொலைக்கு ஒப்பான இத்தகைய செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள மதிய உணவுத்திட்டத்தில் என்ன குறைபாடு இருக்கிறது என்பதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது?

    இந்த ஒப்பந்தம் குறித்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாண்மைகுழு, ஆசிரியர்கள், பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள்,ஊட்டச்சத்து நிபுணர்கள், தற்போது இப்பணியை செய்துவரும் ஊழியர்களிடம்கருத்து எதையும் கேட்காமல், அடிப்படையான ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இது அப்பட்டமான நமது உணவு பாரம்பரியத்தின் மீதும், உணவுஉரிமை மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். உடனடியாக தனியாரிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மதிய உணவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    ×